சிகாமாட் அம்னோவினருடன் டாக்டர் சுப்ரா நோன்பு துறப்பு விருந்துபசரிப்பு

கடந்த காலங்களில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தனது அரசியல் வாழ்க்கையிலும், அமைச்சுப் பணிகளிலும் பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வந்த சிகாமாட் அம்னோவினரின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வண்ணமும், ஆண்டு தோறும் பாரம்பரிய வழக்கமாக நடைபெற்று வந்ததைத் தொடரும் வண்ணமாகவும் சிகாமாட் அம்னோவினருக்கு டத்தோஸ்ரீ டாக்டர் நோன்பு துறப்பு விருந்தளிப்பு வழங்கி கௌரவித்தார். சிகாமாட்டிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் கடந்த மே…

Read More

சிகாமாட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்

சிகாமாட் – மஇகா தேசியத் தலைவரும், தேசிய முன்னணி சார்பில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குப் போட்டியிடுபவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் இன்று புதன்கிழமை சிகாமாட், பூலோ காசாப் வாக்களிப்பு மையத்தில் தனது துணைவியாரோடு வருகை தந்து வாக்களித்தார்.

Read More

டாக்டர் சுப்ரா முயற்சியால் சிகாமாட் சுங்கை மூவார் குழுவகத் தமிழ்ப்பள்ளிககு 4 ஏக்கர் நிலம் – நினைவுகூரும் தலைமையாசிரியர்

1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது. தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், “2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித வளர்ச்சிக்குப் பக்கபலமாக இருந்தது டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள்தான். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில் ஏறக்குறைய RM216,000.00 மேல் இப்பள்ளிக்கு நிதியுதவியாக அவர் வழங்கியுள்ளார். மேலும், ஒவ்வோர் ஆண்டும் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்பு நடத்துதற்கான செலவுத் தொகை முழுவதும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணியம் அவர்களே ஏற்றுக்…

Read More

சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP 2018 – 2023)

 சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் தித் திட்டம் (SEDAP 2018-2023) சிகாமாட் மாவட்டத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளுக்கு மேலும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் வண்ணம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தற்போழுது நிறைவேறும் – முழுமை காணும் – காலம் கனிந்துள்ளது. சிகாமாட் மக்களின் பொருளாதார மேம்பாட்டை முன் வைத்து சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP…

Read More

டாக்டர் சுப்ரா முயற்சியால் இடம் மாற்றம் – மேம்பாடுகள் கண்ட நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி

நாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி எல்லா அம்சங்களிலும் தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. ஆனால், இந்த நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி இன்று இந்த நிலைமையை எவ்வாறு அடைந்தது என்பதை விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அந்தப் பள்ளியின் ஆரம்ப…

Read More