கடந்த காலங்களில் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தனக்கு ஆதரவு தெரிவித்ததோடு, தனது அரசியல் வாழ்க்கையிலும், அமைச்சுப் பணிகளிலும் பல்வேறு வகைகளிலும் ஒத்துழைப்பு வழங்கி வந்த சிகாமாட் அம்னோவினரின் பங்களிப்புக்கு நன்றி கூறும் வண்ணமும், ஆண்டு தோறும் பாரம்பரிய வழக்கமாக நடைபெற்று வந்ததைத் தொடரும் வண்ணமாகவும் சிகாமாட் அம்னோவினருக்கு டத்தோஸ்ரீ டாக்டர் நோன்பு துறப்பு விருந்தளிப்பு வழங்கி கௌரவித்தார்.
சிகாமாட்டிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் கடந்த மே 28-ஆம் தேதி இந்த விருந்துபசரிப்பு நடைபெற்றது.