சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP 2018 – 2023)

 சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் தித் திட்டம் (SEDAP 2018-2023)

சிகாமாட் மாவட்டத்தில் முதலீடு மற்றும் தொழில்துறை வளர்ச்சிகளுக்கு மேலும் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் வண்ணம் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய முன்னணி அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தற்போழுது நிறைவேறும் – முழுமை காணும் – காலம் கனிந்துள்ளது. சிகாமாட் மக்களின் பொருளாதார மேம்பாட்டை முன் வைத்து சிகாமாட் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (SEDAP 2018-2023) கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் சிந்தனையில் உருவான இத்திட்டம் அவரது முயற்சிகளின் காரணமாக தற்போது உருவாக்கம் கண்டு வருகிறது.

இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியை நீண்ட கால இலக்குகளுடன் பொருளாதார ரீதியில் செழிப்பாகவும் வளம் கொண்டவையாகவும் உருவாக்குதல் – குறிப்பாக:

– மனித மூலதனம் & தொழில் முனைவோர் வளர்ச்சித் திட்டம்

– ‎தரமான வேலை வாய்ப்பு

– ‎ஆரோக்கியமான சமுதாயம்

– ‎பொருளாதார வளர்ச்சி

– ‎உள்கட்டமைப்பு

– ‎தொழில்நுட்ப இணைப்பு

– ‎கூட்டு வியூக ஒப்பந்தம் (ECER, MIDA)

– பொருளாதார ஊக்குவிப்பு – சுற்றுச்சூழல் மற்றும் விவசாயம் – சுற்றுலாத்துறையில் தொழில்முனைவர்களுக்கான வாய்ப்பினை உருவாக்குதல். கிழக்கு கடற்கரை பொருளாதார மண்டல(ECER) ஒருங்கிணைப்பின் வழியாக அனுபவமிக்க சுற்றுலாத் திட்டத்தை அடைதல், வேளாண்மை மற்றும் தோட்டத்துறையில் கூடுதல் ஆதரவு சேவைகளை மேம்படுத்துதல்,  “நிபுணத்துவ மருத்துவமனை” மற்றும் “முழுநேர அறிவியல் தங்கும் விடுதி பள்ளி” போன்ற சமூக உள்கட்டமைப்பை நாடாளுமன்றத்தில் மேம்படுத்துதல். நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் சேவை இணைப்பு மூலம் போக்குவரத்து இணைப்புகளை துரிதப்படுத்துதல் மற்றும் இணைப்புகளை மேம்படுத்துதல்,செம்பனை  உற்பத்தியை, உயிர்ச்சத்து மற்றும் உயிர் தொழில்நுட்ப மையமாக நாடாளுமன்றத்தில் இணைத்தல் முக்கியத் தொழில்துறை வளர்ச்சியாக ECER திட்டத்தை சீரமைத்தல் புதிய வளர்ச்சிக்கான நீண்ட கால திட்டத்தைத் தக்கவைக்க மனித மூலதனம் மற்றும் தொழில் முனைவர்களை மேம்படுத்துதல் போன்றவை இந்த திட்டத்தின் இலக்குகளாகும்.

சுற்றுச்சூழல் வரைவு

– உள்கட்டமைப்பு

– ‎சுற்றுச்சூழல் & வேளாண்மை

– ‎தொழில்நுட்ப உள்கட்டமைப்பு

– ‎உயிர்நிறை மையம்

– ‎விவசாய மையம்

– ‎தொழில்துறை ஊக்குவிப்பு

– ‎மனித மூலதனம் & தொழில் முனைவர் மேம்பாடு

உள்கட்டமைப்பைத் துரிதப்படுத்துதல்

– கிழக்கு மேற்கு சாலை இணைப்பு

சிகாமாட் நகரில் மக்கள் சந்தித்து வந்த மிகப்பெரிய போக்குவரத்து சிக்கலான தங்காக் – சிகாமாட் – முவாட்சாம் வழிப்பயணம் தங்காக் – சிகாமாட் நெடுஞ்சாலை நிர்மாணிப்பின் வழி களையப்படும்

கிம்மாஸ்-ஜோகூர் பாரு இரட்டைத் தண்டவாளத் திட்டத்தின் தொடக்க விழா

– இரட்டை இரயில் பாதை இணைப்பு

எதிர்காலத் தொழில் சேவைகளைக் கருதில் கொண்டு சரக்குகள் மற்றும் கனரக சரக்கு இயக்கம், இரயில் திட்டம், சிகாமாட் நகரில் நாடு முழுவதும் உள்ள துறைமுக வசதிகளை இணைக்கும் இணைப்பினை மேம்படுத்துதல்

– உள்நாட்டுத் துறைமுக விரிவாக்கம் மற்றும்  பசுமைத் தாவரச் சுழற்சி என்ற (பயோமாஸ்) சேகரிப்பு மையத்தை நிறுவுதல்

உள்நாட்டுத் துறைமுக விரிவாக்கமானது, மாவட்டத்திற்குள் திட்டமிடப்பட்டிருக்கும் தொழிற்சாலைகளுக்கு போக்குவரத்து இணைப்பினை வழங்கும்.

– சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்

  1. நிபுணத்துவச் சேவை மையத்தை மேம்படுத்துதல்
  2. ‎புதிய HDU (High Dependency Unit) மையத்தை நிறுவுதல்
  3. ‎வெளிநோயாளிகளின் மருந்தக தேவையை மேம்படுத்துதல்
  4. ‎மருத்துவ சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் அறையையும் வெளியேற்ற முறையையும் மேம்படுத்துதல்
  5. ‎1, 2, 3, 4 கான மருத்துவ சிகிச்சை அறைகளுக்கான பிரிவுகளை மேம்படுத்துதல்

நிபுணத்துவச் சேவை அறிமுகம்

சிகாமாட் மருத்துவமனையை நிபுணத்துவ மையமாகத் தரம் உயர்த்துவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்

எலும்பியல் – பொது மருத்துவம் – மகப்பேறியல் – குழந்தை மருத்துவம் – மனநல மருத்துவச் சேவை – கதிரியக்கம் – அவசர சிகிச்சை பிரிவு – செவிமடலியல் – கண் மருத்துவம் – பல் மருத்துவம் – மயக்க மருந்தியல் நிபுணத்துவம்

ல்வி நிறுவனம் மற்றும் மனித மூலதன வளர்ச்சி

எதிர்கால சந்ததியினருக்கு தரமான கல்வி வாய்ப்பை வழங்கும் பொருட்டு அறிவியல் தங்கும் விடுதி பள்ளிகளை அமைத்தல்

ECER திட்டம் மேம்பாட்டின் வழி மனித மூலதனம் & தொழில் முனைவர் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்குதல்

தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல்

தொடர்பு துறையை விரிவாக்க தொழில்நுட்ப உள்கட்டமைப்பை விரிவுபடுத்தப் படுத்த வேண்டும். அதிகத் திறமையான தகவல் தொடர்புகளை வழங்குவதற்காக இணைய இணைப்பு மற்றும் தொலைதொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். உள்ளூர் வர்த்தக சமுதாயத்திற்கான விற்பனை மற்றும் பரிவர்த்தனை திறன்களையும் முதலீட்டுக் கவர்ச்சியையும் மேம்படுத்துவதை உறுதி செய்ய முடியும்.

ECER & MIDA திட்டம் வழி தனியார் துறை முதலீட்டை மேம்படுத்துதல்

விவசாயச் சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு நகரில் பெரிய அளவிலான முதலீட்டாளர்களை ஈர்ப்பதன் வழி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். முதலீட்டாளர்கள் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) தங்கள் வியாபார முதலீட்டினைச் சிகாமாட்டில் அமைக்கும் அளவுக்கு சிகாமாட் நகரை  ஒரு கவர்ச்சிகரமான இடமாக உருமாற்ற வியூகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இம்முதலீட்டு மேம்பாட்டில் உரம் உற்பத்தியாளர்கள் மற்றும் வேளாண்மை கழிவு உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவற்றையும் ஓர் அங்கமாக இணைக்க இலக்குக் கொண்டுள்ளது இந்த  பொருளாதார திட்டம்.

அதுமட்டும்மல்லாமல், சுற்றுச்சூழல், விவசாயத் துறையில் தனியார் துறை முதலீட்டை மேம்படுத்துதல் போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்.

  1. சிகாமாட்டில் (குறிப்பாக ஜெமிந்தா, லாபிஸ் சன்ரைஸ் விவசாயம்) சுற்றுச்சூழல் & விவசாயத் துறையை மேம்படுத்த, இடங்களை அடையாளம் காண்பதோடு தனியார் வணிக முதலீட்டாளர்களையும் அடையாளம் காணுதல்.
  2. சிகாமாட்டில் உள்ள ஆறுகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அளவுக்கு அமைப்பதோடு ஆற்று வழி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல்.
  3. கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல்.
  4. பெக்கோ நகரை, இண்டாவ் ரொம்பின் தேசிய பூங்காவின் (Taman Negara Endau Rompin) நுழைவாயிலாக உயர்வு பெறச் செய்தல்.

சிகாமாட் மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தையை அணுகுவதை எளிதாக்கும் வகையில் தொடர்பு சங்கிலியை மேம்படுத்துதல்

சிகாமாட்டில் விவசாய உற்பத்தி சேகரிப்பு மையங்களில் முதலீடுகளை  விரிவாக்குதல். விரிவாக்கச் சேவைகளை வழங்குவதன் மூலம் சேகரிப்பு மையங்கள் (குளிர் சாதன அறை, செயலாக்கம், தொழில்நுட்பச் சேவை, சேகரிப்பு மையம்) நிறுவப்பட முடியும். இதன்வழி விவசாயிகள் தங்களது இடைத்தரகர்களது சார்புகளைக் குறைக்க உதவுவதோடு, அவர்களின் செலவினங்களைக் குறைத்துத் திறமையுடன் செயல்பட உதவும்.

கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலச் சேவையை (ECER) ஒருங்கிணைத்தல்

மலேசிய ECER சேவை கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் மெர்சிங் நகர் வரை உள்ளடக்கி இருந்தது. தற்பொழுது அவை ஜோகூர் சிகாமாட் நகர் வரை விரிவுப்படுத்தப்படவுள்ளது.

ஐந்து முக்கியப் பொருளாதாரக் கொள்கைகளை அடையாளம் காணுதல் குறிப்பாக :

– எண்ணெய் உற்பத்தி

– எரிவாயு

– சுற்றுலா

– விவசாயம்

– மனித மூலதன மேம்பாடு

– தளவாடங்கள் & வர்த்தக வசதி

சிகாமாட்டில் சாத்தியக் கூறுகள்

– உயிர்தொழில்நுட்பம்

– உயிர் நிறை ஆற்றல்

– சுற்றுச் சுழல்

– விவசாயச் சுற்றுலா

– கல்வி மையம்

இந்த ECER திட்ட அடைவுகள் இதுநாள்வரையில் நமக்குப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாம் எதிர்பார்த்ததைவிட இந்த ECER திட்ட உருமாற்றமானது துரித வளர்ச்சி கண்டுள்ளது. இதன்வழி முதலீட்டாளர்கள் எண்ணிக்கையை மேம்படுத்துவதோடு புதிய வேலை வாய்ப்புகள், தொழில் முனைவர் வாய்ப்புகளை அதிகப்படுத்துவதோடு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *