சிகாமாட் நாடாளுமன்றத்திற்கு வெற்றிகரமாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் டாக்டர் சுப்ரா

இன்று சனிக்கிழமை (28 ஏப்ரல் 2018) சிகாமாட்டில் நடைபெற்ற அந்தத் தொகுதிக்கான வேட்புமனுத் தாக்கலில் அந்தத் தொகுதிக்கான மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது வேட்புமனுவை, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து சமர்ப்பித்தார்.

வேட்புமனுவைச் சமர்ப்பிக்கும் முன்பாக டாக்டர் சுப்ரா, சிகாமாட், பூலோ காசாப் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் தனது துணைவியார், ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார்.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *